Friday, April 20, 2012

அம்மி மிதித்தல் .


மணமக்கள் அக்னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும் . மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மணமகன் செய்வான் .
அதன் பொருள் , ' இந்தக் கல்லைப்போல் உறுதியாக இரு ' என்பதாகும் . தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும் . ஆனால், கல்லோ வளையாது . மாறாக பிளந்துபோகும் .
மணமகளே, கற்பில் நீ கல்லைப்போல் உறுதியாக இரு . அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி தளர்ந்ததால் அகலிகையைக் கல்லாயிருக்கச் சொன்னார் கவுதமர் . அதனாலேதான், நீ கல்லைப் போல் உறுதியாக இரு என்று கணவன் கூறும் பாங்கில் மனைவியின் காலைப்பற்றி அந்த அம்மியின் மீது வைப்பான் .
அம்மி மிதித்தபின் அருந்ததியை வணங்குவார்கள் . ' அருந்ததி ' என்ற சொல்லுக்கு கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள் .
--- தினமலர் , 25 . 1 . 2012 .

No comments: